புது வருடத்தில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்தில் போதி பூஜை

புது வருடத்தில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்தில் போதி பூஜை

2026 புது வருடத்தில் ஆசி வேண்டி பாராளுமன்ற வளாகத்திலுள்ள ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் விசேட போதி பூஜை நிகழ்வு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் (05) முற்பகல் இடம்பெற்றது.

பாராளுமன்ற பணியாட்களின் பௌத்த சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆசீர்வாத போதி பூஜை நிகழ்வை, பெலவத்த மயுரபாத பிரிவென் விஹாரையின் சத்தர்ம கீர்தி ஸ்ரீ விசித்ர தர்ம கதிக பூகெந்தயாயே குணரதன தேரர் நடாத்தினர்.

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரும் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்களும், இணைந்த சேவைகளின் பணியாளர்களும், இலங்கை பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )