களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்பு

களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்பு

பட்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (29) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்குத் அவர்கள் தெரியப்படுத்தினர்.

தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய சுப்பிரமணியம் நேசதுரை என்றவாறே இவ்வாறு உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )