
சிகையலங்கார நிலையங்களுக்கு புதிய நிலையான கட்டண விதிமுறைகள்
மூதூர் பிரதேச சபைக்குற்பட்ட பகுதியின் அனைத்து சிகையலங்கார நிலையங்களுக்கும் புதிய நிலையான விலைகள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய உத்தியோகபூர்வ அறிவித்தல், சபையின் தவிசாளர் மற்றும் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
2026 பிப்ரவரி 16 அன்று நடைபெற்ற கலந்துரையாடலின் முடிவுகளின்படி, இந்த விதிகள் 2026 பிப்ரவரி 20 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
மூதூர் பிரதேச சபை தற்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) ஆட்சியின் கீழ் உள்ளது.
பிரதேச சபைக்குற்பட்ட சிகை அலங்கார நிலையங்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் நிர்ணயிக்கப்பட்ட சுகாதாரத் தரங்களைப் பேண வேண்டும் எனவும் தவறும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உரிமையாளர்களும் 2026 மார்ச் 5 ஆம் திகதிக்கு முன்னர் செல்லுபடியாகும் வர்த்தக உரிமத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உரிமம் இல்லாத சிகையலங்கார நிலையங்கள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்குப் பொருத்தமற்ற நாகரீகமற்ற சிகையலங்காரங்கள் மற்றும் வர்ணம் பூசுதல் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு உட்பட்ட சிகையலங்காரங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு எனவும் பிரதேச சபையின் உத்தியோகபூர்வ அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
புதிய கட்டண விபரங்கள் ரூபாயில்
முடி வெட்டுதல் – 300.00
தாடி சவரம் செய்தல்- 200.00
தாடி திருத்துதல் – 300.00
மொட்டை அடித்தல்- 300.00
முடி வெட்டுதல் மற்றும் தாடி சவரம் – 500.00
முடி மற்றும் தாடி திருத்துதல் – 600.00
10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு – 200.00
10வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு – 250.00

