பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர் செல்லுபடியாகும் காலம் மார்ச் 15-ஆம் திகதி வரை நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர் செல்லுபடியாகும் காலம் மார்ச் 15-ஆம் திகதி வரை நீடிப்பு

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சருக்கான செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தலா 3,000 ரூபாய் பெறுமதியான காலணி கொள்வனவுக்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வவுச்சர்கள் ஆரம்பத்தில் பிப்ரவரி 28-ஆம்திகதியுடன் காலாவதியாகவிருந்தன.

ஆனால், தற்போது மாணவர்கள் இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இதன் செல்லுபடியாகும் காலம் மார்ச் 15-ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பயனாளிகள் மார்ச் 15-ஆம் திகதி வரை தமக்குரிய வவுச்சர்களைப் பயன்படுத்தி காலணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )