
கண்டியின் கடுகண்ணாவ கணேதென்னயில் நிலச்சரிவு இடிபாடுகளில் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்
கண்டி கடுகண்ணாவ கீழ் பிரிவு அருகே ஹிங்குல கணேதென்ன பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் ஒருவரை மீட்புக் குழுக்கள் தற்போது மீட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்புப் படையினர் ,போலீஸார் , பிரதேசவாசிகளும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அப்பகுதியில் உள்ள கடையொன்றில் மண்மேடு சரிந்து விழுந்தது .
இடைபாடுகளுக்குள் சீக்கிய நால்வர் மீட்கப்பட்ட நிலையில் அவர்களின் ஒருவர் உயிரிழந்துள்ளார்
இந்நிலையில் மேலும் நால்வர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனக் கூறப்பட்ட போதிலும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தொடர்பில் சரியாக கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

