பாகிஸ்தான் அணிக்கு புது நம்பிக்கை…இலங்கைக்கு காத்திருக்கும் சவால் !

பாகிஸ்தான் அணிக்கு புது நம்பிக்கை…இலங்கைக்கு காத்திருக்கும் சவால் !

2026 ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு இங்கிலாந்து அணி ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது.

சூப்பர் 8 சுற்றில் நேற்று (27) நடைபெற்ற பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

இங்கிலாந்தின் இந்த வெற்றி, தொடரை விட்டு வெளியேறும் நிலையில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

நேற்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில்
நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை பதிவுசெய்தது

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்தில் சவால்கள் காத்திருந்தன.

ஆனால், கடைசி நேரத்தில் வில் ஜாக்ஸ் மற்றும் ரஹான் அகமது ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இங்கிலாந்து அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தான் அணி நேரடியாகத் தொடரை விட்டு வெளியேறியிருக்கும். ஆனால் இங்கிலாந்து வெற்றி பெற்றதால், பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இன்னும் எஞ்சியுள்ளது.

பாகிஸ்தான் அணி தனது கடைசி சூப்பர் 8 போட்டியில் இன்று (28) இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து செய்த உதவியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி சாதாரண வெற்றியைப் பெற்றால் போதாது ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் பாகிஸ்தான் அணிக்கு உருவாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )