ஈரான் மீதான ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்து, தெஹ்ரானில் உள்ள தூதரகத்தை மூடுவதாகவும்தூதுவர் மற்றும் தூதரகக் குழுவினரைத் திரும்பப் பெறுவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

ஈரான் மீதான ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்து, தெஹ்ரானில் உள்ள தூதரகத்தை மூடுவதாகவும்தூதுவர் மற்றும் தூதரகக் குழுவினரைத் திரும்பப் பெறுவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

ஈரான் மீதான ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்து, தெஹ்ரானில் உள்ள தூதரகத்தை மூடுவதாகவும், தூதுவர் மற்றும் தூதரகக் குழுவினரைத் திரும்பப் பெறுவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு.

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) நிலப்பரப்பைக் குறிவைத்து ஈரான் நடத்திய நேரடி ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாகவும், ஈரானுக்கான தனது தூதுவர் மற்றும் தூதரகக் குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் திரும்பப் பெறுவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

குடியிருப்புப் பகுதிகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் சேவை மையங்கள் உள்ளிட்ட சிவில் இலக்குகள் மீது நடத்தப்பட்ட இந்த விரோதமான தாக்குதல்கள், அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதோடு, இது ஒரு பாரதூரமான மற்றும் பொறுப்பற்ற செயலாகும்.

மேலும், இது நாட்டின் இறையாண்மையை மீறும் செயலாகும் என்பதோடு, சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை தெளிவாக மீறும் செயலாகவும் அமைந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு (MoFA) வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன:

இந்த முடிவானது, தனது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதியான மற்றும் அசைக்க முடியாத நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளைச் சீர்குலைக்கும் ஈரானின் தொடர்ச்சியான பகைமை மற்றும் ஆத்திரமூட்டும் நடத்தைகளைக் கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் பிராந்தியத்தை மிகவும் அபாயகரமான பாதைக்கு இட்டுச் செல்வதுடன், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )