முதல் 24 மணித்தியாலங்களில் ஈரானின் 1,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

முதல் 24 மணித்தியாலங்களில் ஈரானின் 1,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையின் முதல் 24 மணித்தியாலங்களுக்குள், அங்குள்ள 1,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி (US Central Command) இது குறித்துத் தெரிவிக்கையில்,

”இந்த இராணுவ நடவடிக்கை ‘ஒப்பரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) என அழைக்கப்படுகிறது.
முதல் 24 மணிநேர தாக்குதலில் அதிநவீன மறைந்து தாக்கும் குண்டுவீச்சு விமானங்கள் (Stealth Bombers), ஆளில்லா விமானங்கள் (Drones), போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஈரானின்,கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (Command and Control Centers),பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் (Ballistic Missile Sites),ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) ஒருங்கிணைந்த தலைமையகம் ஆகிய பகுதிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன”.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )