நீதிபதிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது

நீதிபதிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது

உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நீதிபதி, கடந்த 2022 ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டும் வகையில் மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக முறைப்பாடு அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இது தொடர்பான விடயங்களை சட்டமா அதிபருக்கு அளித்துள்ளனர்.

சந்தேகநபர் செய்த நடவடிக்கைகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் வருவதாகவும், அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்கறிஞரை கைது செய்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )