
தாக்குதலால் கோமா நிலையிலிருந்த ஈரானின் உயர் தலைவர் காமெனியின் மனைவி உயிரிழந்தார்
ஈரானின் உயர் தலைவர் அலி காமெனியின் மனைவி மன்சூரே கோஜஸ்தே பாகர்சாதே (Mansoureh Khojaste Bagherzadeh) உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயர் தலைவர் காமெனியின் மனைவி கோமா நிலையில் இருந்ததாக ஈரானிய ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் , ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மகளும் பேரனும் கொல்லப்பட்ட நிலையில் மனைவி கோமா நிலைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயர் தலைவர் காமெனி மற்றும் அவரது மனைவிக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என மொத்தம் ஆறு பிள்ளைகள் உள்ளனர்.
CATEGORIES Sri Lanka

