
ஈரானின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் கூட்டு அறிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள், அந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா மற்றும் ஆறு வளைகுடா நட்பு நாடுகள் இணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பின்வருவன வலியுறுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் போருடன் தொடர்பில்லாத நாடுகளை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துவது மிகவும் பொறுப்பற்ற ஒரு செயலாகும்.
பிராந்தியம் முழுவதும் ஈரானிய தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
CATEGORIES Sri Lanka

