ஈரானின் தாக்குதலால் கட்டாரின் LNG இயற்கை எரிவாயு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

ஈரானின் தாக்குதலால் கட்டாரின் LNG இயற்கை எரிவாயு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, கத்தார் நாட்டின் அரசுக்குச் சொந்தமான QatarEnergy நிறுவனம் தனது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

கத்தாரின் முக்கிய எரிவாயு சுத்திகரிப்பு நிலையங்களான ராஸ் லஃப்பான் (Ras Laffan) மற்றும் மற்றொரு முக்கிய உற்பத்தி மையமான மெசாயிட் (Mesaieed) ஆகிய இடங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையாக, கத்தார் உலகின் முன்னணி திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒரு நாடாகும்.

கத்தாரில் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளமையானது, உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் எரிவாயு விலைகளில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )