குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க  நிதி உதவி வழங்கும் சீனா

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நிதி உதவி வழங்கும் சீனா

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்த ஆண்டு ஜனவரி 1-ந் திகதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் மானியம் வழங்கப்படும் சீன அர சாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் 2022 மற்றும் 2024ம் ஆண்டுக்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் பகுதியளவு நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன் அடையும் எனவும் குழந்தைகளை வளர்ப்பதற்கான நிதிச் சுமையைக் குறைக்க உதவும் எனவும் மற்றும் இளம் தம்பதிகளின் கருவுறுதல் கவலைகளைத் தணிக்கும் என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )