
போதைப்பொருளுடன் 27 வயது நபர் கைது
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஒரு தொகுதி ‘குஷ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 01 கிலோ 154 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வேயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

