
மார்ச் மாதத்திலும் எரிவாயு விலையில் மாற்றமில்லை
மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்திலும் எரிவாயு விலையில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இரண்டாவது மாதமாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படவுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையின் அடிப்படையில் சந்தையில் எரிவாயு சிலிண்டர்கள் பின்வரும் விலைகளில் விற்பனை செய்யப்படும்:
12.5 கிலோ கிராம் கொள்கலன்: ரூபா 3,690
5 கிலோ கிராம் கொள்கலன்: ரூபா 1,482
2.3 கிலோ கிராம் கொள்கலன்: ரூபா 694

