
மீட்கப்பட்ட்டு இலங்கையில் தங்கியிருக்கும் ஈரானிய மாலுமிகளைதிருப்பி அனுப்ப வேண்டாம் என இலங்கைஇடம் மீது அமெரிக்கா கோரிக்கை
ஈரானியக் கப்பல் பணியாளர்களை மீண்டும் ஈரானுக்கு அனுப்பக் கூடாது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
மூழ்கடிக்கப்பட்ட IRIS Dena போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையிடம் கோரியுள்ளது.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மாலுமிகளை ஈரான் தனது பிரசார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை (04) காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் IRIS Dena போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் பல மாலுமிகள் உயிரிழந்த போதிலும், இலங்கை கடற்படையினரின் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்ட 32 பேர் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் தற்போது மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

