லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு

லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு

லெபனானின் கிழக்கு பகுதியில் உள்ள பெக்கா வேலே (Bekaa valley) பள்ளத்தாக்கில் அமைந்துள்ள நபி (Nabi) நகரில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் வான்தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன் 33 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான விரிவடைந்து வரும் மோதலின் முக்கிய முனைப்பகுதிகளில் ஒன்றாக லெபனான் மாறியுள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரமாக லெபனான் மற்றும் பெய்ரூத் நகரின் தெற்கு புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவம் கட்டாய வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )