வண, இத்தேபானே தம்மாலங்கார தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்

வண, இத்தேபானே தம்மாலங்கார தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாராதிபதி வண, இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதி, தேரருடன் சிறு உரையாடலை மேற்கொண்டதுடன், அரசாங்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க ஜனாதிபதிக்கு தேரர் தனது ஆசிர்வாதங்களைத் தெரிவித்தார்.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் சிரேஷ்ட கர்மவாகாச்சார்ய வண,மாபலகம புத்தசிறி தேரரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )