கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

இன்று காலை ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெயின் விலை சுமார் 87.88 அமெரிக்க டாலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று , அமெரிக்க கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.35 டாலர்களாகப் பதிவாகியுள்ளது.

உலகச் சந்தையில் வேகமாக அதிகரித்த கச்சா எண்ணெய் விலைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.

2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு, கடந்த திங்கட்கிழமை முதன்முறையாக கச்சா எண்ணெய் விலை 100 டாலர் எல்லையைத் தாண்டியதுடன், அதிகபட்சமாக 119 டாலர் வரை உயர்ந்தது.

மத்திய கிழக்கில் நிலவிய போர் பதற்றமே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

, “போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை 90 டாலர்கள் வரை குறைந்தது. இது 8% வீழ்ச்சியாகும்.

இன்று காலை ஆசிய சந்தை நடவடிக்கைகள் ஆரம்பமான போது, ஈரான் போர் சூழலால் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் ஸ்திரமற்ற தன்மைக்கு பிறகு, எண்ணெய் விலைகள் தற்போது ஓரளவிற்கு நிலையான மட்டத்தில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )