ஹார்முஸ் நீரிணைக்கு அருகே ஈரான் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஹார்முஸ் நீரிணைக்கு அருகே ஈரான் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஹார்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) அருகே ஈரான் கடற்படைக்கு சொந்தமான 16 கப்பல்கள் உள்ளிட்ட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (USCENTCOM) அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளிகளை அமெரிக்க மத்திய கட்டளையகம் தனது X (முன்னர் ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும், உலகின் மிக முக்கியமான எரிசக்தி மையமாக ஹார்முஸ் நீரிணை கருதப்படுகிறது.

இந்த நீரிணையில் ஈரான் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகக் கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
”ஹார்முஸ் நீரிணையில் ஈரான் போர்க்கப்பல்களை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )