
கொழும்பு – மெல்பேர்ன் இடையே விமான சேவைகள் அதிகரிப்பு !
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் அந்நாட்டிலுள்ள இலங்கையர்களின் பயணத் தேவைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கொழும்புக்கும் மெல்பேர்னுக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த புதிய அட்டவணை 2026 ஆகஸ்ட் 02 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
தற்போது உள்ள தினசரி விமான சேவைகளுக்கு மேலதிகமாக, வாரத்தில் மூன்று நாட்கள் புதிய விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
புதிய கூடுதல் விமானங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
குறித்த விமானங்கள் கொழும்பிலிருந்து பிற்பகல் 14:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04:30 மணிக்கு மெல்பேர்னைச் சென்றடையும்.
மெல்பேர்னில் இருந்து காலை 06:00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12:15 மணிக்கு கொழும்பை வந்தடையும்.

