T20 உலகக் கிண்ணப் வெற்றியாளர் இந்தியாவுக்கு 2,639,423 டொலர் பரிசுத் தொகை

T20 உலகக் கிண்ணப் வெற்றியாளர் இந்தியாவுக்கு 2,639,423 டொலர் பரிசுத் தொகை

டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணிகளும் வெளிப்படுத்திய திறமையின் அடிப்படையில் வழங்கப்பட்ட பரிசுத் தொகைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட, இம்முறை பரிசுத் தொகை சாதனை அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு 2,639,423 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாயில் 82 கோடிக்கும் அதிகம்) வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணிக்கு 1,422,692 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாயில் 44 கோடிக்கும் அதிகம்) கிடைத்துள்ளது.

சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்ற இலங்கை அணிக்கு 475,962 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாயில் 14 கோடிக்கும் அதிகம்) வழங்க ஐசிசி தீர்மானித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )