டுபாய்க்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து – KLM விமான சேவை நிறுவனம்

டுபாய்க்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து – KLM விமான சேவை நிறுவனம்

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக டுபாய்க்கான தனது அனைத்து விமான சேவைகளையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ரத்து செய்துள்ளதாக நெதர்லாந்து விமான சேவை நிறுவனமான KLM அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Air France-KLM குழுமத்தின் கீழ் இயங்கும் KLM நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

டுபாய்க்கான அனைத்து விமான சேவைகளும் மார்ச் 28 வரை இடைநிறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் பயணிகளை தாய்நாட்டிற்கு திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் உதவ தயாராக இருப்பதாகவும் KLM தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )