
தெஹ்ரானில் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு !
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மேற்குப் பகுதிகளிலும் கிழக்குப் பகுதிகளிலும் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், தெஹ்ரான் நகரத்தின் வான்வெளியில் போர் விமானங்கள் பறந்துசெல்லும் சத்தமும் கேட்கப்பட்டதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இஸ்ரேல் இராணுவம் ஈரான் மற்றும் லெபனான் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கில் தொடர்ந்துவரும் மோதலின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளதாகவும், சமீப காலமாக தெஹ்ரான் உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான வான்தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த தாக்குதல்களால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

