
ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் அரசு மற்றும் இராணுவ கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு விரிவான வான்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி,
இந்த தாக்குதல்கள் “விரிவான தாக்குதல்களின் அலை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் அரசு உட்கட்டமைப்புகள் இலக்காகக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்களில் ஏவுகணை களஞ்சியங்கள், நிலத்தடிப் கட்டளை மையங்கள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் உள்ளிட்ட பல முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள், இஸ்ரேல் பொதுமக்களை நோக்கி மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைத் தடுக்கவும், ஈரானின் ஏவுகணை தாக்குதல் திறனை பலவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

