
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பது சாத்தியமில்லை ; ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சர்
48 அணிகள் பங்கேற்கும் 23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கு ஈரான் அணி ஏற்கனவே தகுதி பெற்று ‘ஜி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த அணியின் போட்டிகள் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
ஆனால், ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி பங்கேற்பது சாத்தியமில்லையென ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமத் டோன்யமாலி தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் இருநாடுகளுக்கிடையேயான பதற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
CATEGORIES Sports News

