
சட்டென்று மாறுது வானிலை படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது
பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாபு விஜய்.
இவர் தற்போது நடிகர் ஜெய்யை வைத்து ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற புதிய படத்தை இயக்குகிறார்.
இயக்குனர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை சினேகன் எழுத ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ளது.
CATEGORIES Cinema

