8 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ள சவுதி

8 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ள சவுதி

சவுதி அரேபியாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் 8 ட்ரோன்களை வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அல்-கர்ஜ் மாகாணம் மற்றும் தலைநகர் ரியாத்தின் மேற்குப் பகுதிகளிலும் இந்த ட்ரோன் தாக்குதல்கள் தடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சிகளில் 14 ட்ரோன்கள் தடுத்து அழிக்கப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது.

சவுதி வான்வெளியை நோக்கி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் முயற்சிகளை தடுக்க பாதுகாப்பு படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )