
பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால் லெபனானில் உள்ளதங்கள் நாட்டு அதிகாரிகளை வெளியேறுமாறு அவுஸ்திரேலியாஅறிவிப்பு
லெபனானில் நிலவும் பதற்ற நிலைமையை கருத்தில் கொண்டு அங்கு
பணியாற்றி வரும் அதிகாரிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (penny wong) தெரிவிக்கையில்,
“லெபனானில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், லெபனானில் உள்ள அவுஸ்திரேலியர்களுக்கு தூதரக உதவிகளை வழங்கும் நோக்கில் சில அதிகாரிகள் மட்டும் அந்நாட்டில் தொடர்ந்து பணியாற்றுவார்கள் ” என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்

