
1,600 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் கைப்பற்றல்
துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (14) காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, லொறி ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 1,654 கிலோகிராம் 615 கிராம் அளவிலான பீடி இலைகள் இதில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்விலைகளை கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டு வர பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு படகையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை துங்கல்பிட்டிய பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

