
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ; 4 பேர் பலி
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கொடூரமான பேருந்து விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே ஏற்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

