கொழும்பு மாநகரில் வாகன நிறுத்தம் ; கட்டண வசூல் நிறுத்தம்

கொழும்பு மாநகரில் வாகன நிறுத்தம் ; கட்டண வசூல் நிறுத்தம்

கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குள் வாகன நிறுத்துமிடக் கட்டணம் வசூலிப்பதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளது.

இன்று (18) நடைபெற்ற ஒரு சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரக்கூன் குறிப்பிட்டார்.

மேலும் அவர், உலகில் நிலவும் தற்போதைய இராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தத் துன்பத்தைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும், கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வாகன நிறுத்துமிடத்திற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தபோதிலும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்துக் கட்டணங்களும் நீக்கப்பட்டுள்ளதாக பிரதி மேயர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )