மத்திய கிழக்குப் போர்ச் சூழல் ;  நிதி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை

மத்திய கிழக்குப் போர்ச் சூழல் ; நிதி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பது, அத்தியாவசிய பொதுச் சேவைகளை பேணுவது, மற்றும் அரச நிதி மற்றும் அனுமதிக்கப்பட்ட செலவுத்தீர்களுக்குள் செலவினங்களை கண்காணிப்பது குறித்த நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமாவால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலை மற்றும் புதன்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு:

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை மார்ச் 01 நிலவிய விலை அடிப்படையில் வழங்க வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எரிபொருள் கொடுப்பனவுக்குப் பதிலாக வழங்கப்படும் பிற கொடுப்பனவுகளும் அந்த எரிபொருள் அளவையும் விலையையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும் எனச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், போர்ச் சூழலில் நாட்டின் நிதி கட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய சேவைகள் பணி தடையின்றி தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )