
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி முற்றுகை ; இரு பெண்கள் கைது
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மசாஜ் நிலையம் என்ற பெயரில் மறைமுகமாக நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (17) விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, விடுதியை நிர்வகித்து வந்த பெண் ஒருவரும், அங்கு தங்கியிருந்த மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 49 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும், ஓப்பநாயக்க மற்றும் ஹெய்யந்துடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

