மொனராகலையில் மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு

மொனராகலையில் மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு

மொனராகலை மாவட்டம், புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாகொடயா பகுதியில் மின்சாரம் தாக்கியதில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், சேனை நிலத்தில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட மின்கம்பியில் சிக்கியதே யானையின் மரணத்திற்குக் காரணமாகும் என வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த யானை சுமார் 10 வயதுடையதாகும்.

கடந்த ஆண்டில் மொனராகலை மாவட்டத்தில் சுமார் 10 காட்டு யானைகள் சட்டவிரோதமான முறையில் உயிரிழந்த நிலையில், இவ்வாண்டின் முதல் யானை மரணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகள் மொனராகலை மாவட்ட வனவிலங்கு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )