
“மக்கள் மீது சுமை தள்ளுவது சட்டவிரோதம்” ; இலங்கை வர்த்தக சபையின் பிரதித் தலைவர் கடும் விமர்சனம்
தரமற்ற நிலக்கரியினால் ஏற்படும் நட்டத்தை மக்கள் மீது சுமத்துவது சட்டவிரோதமானது என இலங்கை வர்த்தக சபையின் பிரதித் தலைவர் கலாநிதி லக்மால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவை முன்னிட்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட இறுதி பொது கருத்துக்கேட்டல் அமர்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , ”குறைந்த மின்சாரப் பயன்பாட்டாளர்களின் கட்டணம் 1375% வரை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக பயன்பாட்டாளர்களின் கட்டணம் குறைக்கப்பட்டிருப்பது நியாயமற்றது எனக் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், இந்த முன்மொழிவுகள் பொதுமக்களின் நலனை விட தனிநபர் தேவைகளை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டவை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

