எரிபொருள் QR குறியீட்டிற்கு புதிய ‘Override’ முறைமை அறிமுகம்

எரிபொருள் QR குறியீட்டிற்கு புதிய ‘Override’ முறைமை அறிமுகம்

முன்னர் வேறொரு கைபேசி எண்ணில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் ஏற்பட்ட சிரமங்களை நீக்குவதற்காக, இன்று (19) முதல் புதிய ‘Override’ முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சம், குறிப்பாக மார்ச் 14, 2026-க்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழைய பதிவில் பயன்படுத்தப்பட்ட கைபேசி எண் தற்போது பயன்பாட்டில் இல்லாததாலோ அல்லது வேறொருவருக்குச் சொந்தமானதாலோ QR குறியீட்டை பெற முடியாமல் இருந்த பொதுமக்களுக்கு இது ஒரு முக்கிய நிவாரணமாகும்.

இந்த முறைமையின் கீழ்,

வாகன உரிமையாளர் தமது வாகன எண் மற்றும் சேசிஸ் எண்ணை சரியாக உள்ளிட்டு, வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

பின்னர், ‘Override’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, முன்னைய பதிவை ரத்து செய்து, புதிய கைபேசி எண்ணின் கீழ் வாகனத்தை மறுபதிவு செய்ய முடியும்.

இவ்வாறு செயல்படுத்தப்படும் போது, அந்த வாகனத்துடன் தொடர்புடைய பழைய கணக்கு தரவுகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டு, புதிய தகவல்களுடன் கணக்கு உடனடியாக செயல்படுத்தப்படும். இதனால், முந்தைய பயனர் அந்த வாகனத்திற்கான அணுகலையும் சிறப்புரிமைகளையும் இழப்பார்.

இந்த புதிய வசதி மூலம், பிறர் பெயரில் அல்லது பயன்படுத்தப்படாத தொலைபேசி எண்களில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கான QR குறியீட்டை உண்மையான உரிமையாளர்கள் எளிதாகப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டப்பூர்வ உரிமை இல்லாத வாகனங்களின் பதிவுகளை மாற்றுவது அல்லது நீக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )