வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வானிலை ஆய்வுத் திணைக்களத்தின்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

அப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்னலால் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )