போதைப்பொருட்களை காலி சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக உள்ளே வீசுவதற்காக வைத்திருந்த நபர் கைது

போதைப்பொருட்களை காலி சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக உள்ளே வீசுவதற்காக வைத்திருந்த நபர் கைது

காலி சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக, உட்பகுதிக்குள் வீசுவதற்காகத் தயாராக, போதைப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்த ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் காலி, கந்தேவத்தை பகுதியில் கைது செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து

ஐஸ் போதைப்பொருள் – 2 கிராம் 590 மில்லிகிராம்

புகையிலை – 110 கிராம்

புகையிலைக் காம்புகள் – 540 கிராம்

கைபேசிகள் – 4

கைபேசி சார்ஜர்கள் – 23 ஆகியனவும் கைப்பற்றப்பட்டன.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தப் பொருட்கள் அனைத்தையும் சிறைச்சாலை மதிலுக்கு மேலாக உள்ளே வீசுவதற்கு அவர் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காலி, கந்தேவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )