வாதுவையில் ரயிலுடன் கார் மோதி விபத்து

வாதுவையில் ரயிலுடன் கார் மோதி விபத்து

வாதுவை பகுதியில் உள்ள ரயில் கடவைப்பாதை ஒன்றில், கார் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இளம் தம்பதியினர் காயமடைந்துள்ளனர்.

மருதானையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் கார் மோதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது காரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இருந்துள்ளனர். காயமடைந்த இருவரும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் முதலில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )