நெலுவ, கின் கங்கையில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

நெலுவ, கின் கங்கையில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

நெலுவ, மாதுகெட்ட கின் கங்கையில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பிடதெனிய, படுவங்கல பிரதேசத்தைச் சேர்ந்த திருமணயாகாத ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் நெலுவ பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மனநல பாதிப்பு அல்லது ஒருவித நோயினால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.

நெலுவ பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )