
இன்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் பாரியளவு அதிகரிப்பு
இன்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
303 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லங்கா வெள்ளை டீசல் 79ரூபாயினால் அதிகரிப்பட்டு 382ரூபாயாக விற்பனைசெய்யப்படுகிறது.
353 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 4ஸ்டார் யூரோ 4 லங்கா டீசல்
90ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 443ரூபாயாக விற்பனைசெய்யப்படுகிறது.
195 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மண்ணெணெய் 60ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 255ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது.
365 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட,ஒக்டேன் 95ரக யூரோ 4 லங்கா பெற்றோல் 90 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 455 ரூபாயாக விற்பனைசெய்யப்படுகிறது.
317 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92ரக லங்கா பெற்றோல் 81 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 398 ரூபாயாக விற்பனைசெய்யப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

