
மீகஸ்வெவில் பெண் சிசுவின் சடலம் மீட்பு
மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சிசுவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறியும் நோக்கில், சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகளின் படி, சிசு உயிரிழந்து சுமார் இரண்டு நாட்கள் கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிசுவின் பெற்றோர் யார் என்பதையும், எதற்காக சிசு கைவிடப்பட்டது என்பதையும் கண்டறிய மீகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

