சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இலங்கைக்கு வழங்க  ரஷ்யா உடன்பாடு

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இலங்கைக்கு வழங்க ரஷ்யா உடன்பாடு

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (26) உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் குமார ஜயகொடி, அனில் ஜயந்த மற்றும் கனிம எண்ணெய் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியில், நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக மாற்று வழிகளை நாட அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இதற்கமைய, எரிபொருள் விநியோகம் தொடர்பான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்காக குறித்த தூதுக்குழுவினர் இன்று (26) காலை இலங்கையை வந்தடைந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )