தொழில்நுட்பக் கோளாரினால் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தபட்டதாக அறிவிக்கப்பட்ட போதும் மக்கள் வருகை

தொழில்நுட்பக் கோளாரினால் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தபட்டதாக அறிவிக்கப்பட்ட போதும் மக்கள் வருகை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உட்பட அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் (மார்ச் 27) பெருமளவிலான மக்கள் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளனர்.

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள முறிவு காரணமாக, மறு அறிவித்தல் வரை அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுவதாகத் திணைக்களம் நேற்று (26-ஆம் தேதி) உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பையும் மீறி இன்று காலை முதல் பொதுமக்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தந்துள்ளனர். இவர்களில் பலர் கடந்த செவ்வாய்க்கிழமை வருகை தந்து தமது பணிகளை முடிக்க முடியாமல் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, அண்மைய வெள்ளப் பெருக்கினால் தமது அடையாள அட்டைகளைத் தொலைத்த பாடசாலை மாணவர்கள் பலர் இன்றும் வருகை தந்துள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு அவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் கடும் கவலையில் உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )