ஈரானுக்கு எதிரான தரைவழிப் போர் நடவடிக்கைக்கு பென்டகன் தயார்

ஈரானுக்கு எதிரான தரைவழிப் போர் நடவடிக்கைக்கு பென்டகன் தயார்

ஈரானுக்குள் நுழைந்து தரைவழிப் போர் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக ‘வொஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது பல வாரங்கள் நீடிக்கக்கூடிய ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகம் இதற்கான போர்த் திட்டங்களை ஏற்கனவே வகுத்து முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி தனது ஒப்புதலை வழங்குவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சுமார் 4,000 கடற்படை வீரர்கள் ஏற்கனவே மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குச் சென்றுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

82-வது வான்வழிப் பிரிவின் பாராசூட் வீரர்கள் இந்தப் போர் நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )