
நாட்டில் வெப்பமான வானிலை தொடரும்
நாட்டில் வெப்பமான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.அதிகாலை நேரங்களில் மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CATEGORIES Sri Lanka

