
மார்ச் 23, 24 , 26 திகதிகளில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் நாளை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, மார்ச் 23, 24 மற்றும் 26 ஆகிய மூன்று தினங்களில் பத்தரமுல்லை ‘சுஹுருபாய’ பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களுக்கு வருகை தந்து, ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனவர்களுக்கு மாத்திரம், நாளை (30ஆம் திகதி) ஒரு நாள் சேவையின் கீழ் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தேவையான அனைத்து ஆவணங்களுடன் உரிய அலுவலகங்களுக்கு வருகை தந்து அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31, 2026 (செவ்வாய்க்கிழமை) முதல் பத்தரமுல்லை பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழமை போன்று ஒரு நாள் சேவை செயற்படுத்தப்படும்.
அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான அடையாள அட்டைத் தகவல் சரிபார்ப்பு மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதற்காக மாற்று வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது.
பிரதான மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவை பணிகள் 2026 ஏப்ரல் 06 (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகும்.
கணினி கட்டமைப்பு முழுமையாக வழமைக்குத் திரும்பியதும் அனைத்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

