
DNA சோதனையில் உறுதி ; ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு ரங்கராஜ் தந்தை
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தந்தை என்பது மரபணு (DNA) சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜாய் கிரிசில்டா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரங்கராஜுக்கு DNA சோதனை நடத்த அனுமதி வழங்கியிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அதற்கான அறிக்கை ஓய்வுபெற்ற நீதிபதி பி. கலையரசன் தலைமையிலான மத்தியஸ்தக் குழுவிற்கு வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக, DNA சோதனையில் தானே தந்தை என உறுதியானால், குழந்தையின் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயாராக இருப்பதாக ரங்கராஜ் தெரிவித்திருந்தார்.

