ரஷ்ய இராணுவ விமானம் மோதி விபத்து – 29 பேர் உயிரிழப்பு

ரஷ்ய இராணுவ விமானம் மோதி விபத்து – 29 பேர் உயிரிழப்பு

கிரீமியாவில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் ரஷ்யாவின் An-26 வகை இராணுவ போக்குவரத்து விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 29 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று அதிகாலை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி TASS செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் (1500 GMT) கிரீமியா மீதான திட்டமிடப்பட்ட பயணத்தின் போது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

தேடுதல் குழுவினர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டறிந்துள்ளனர். அங்குள்ள தகவல்களின்படி, விமானத்தில் இருந்த 6 பணியாளர்கள் மற்றும் 23 பயணிகள் என அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

கருங்கடல் கடற்கரையை ஒட்டிய மலைப்பாங்கான பகுதிகளைக் கொண்ட கிரிமியா தீபகற்பத்தை, 2014 ஆம் ஆண்டு உக்ரைனிடமிருந்து ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )